இந்தியா

நாட்டில் 10ல் 4 ரயில்கள் தாமதமாக ஓடுகின்றன: ஆய்வில் தகவல்

நாட்டில் 10ல் 4 ரயில்கள் தாமதமாக ஓடுகின்றன: ஆய்வில் தகவல்

webteam

நாட்டில் ஓடும் பத்தில் நான்கு ரயில்கள் காலதாமதம் ஆவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இந்திய ரயில்வேயின் புள்ளிவிவர அறிக்கையில், நாட்டில் ஓடும் பத்தில் நான்கு ரயில்கள் காலதாமதம் ஆவது தெரியவந்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 43 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், அதுவே ரயில்களின் தாமதத்துக்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த அக்டோபர் முதல் பழைய தண்டவாளத்தை மாற்றி புதிதாக அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணி மட்டுமின்றி, மூடுபனி, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறாலும் ரயில்கள் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.