இந்தியா

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே உத்தரவு!

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே உத்தரவு!

webteam

ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு ரயில்வே துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் கடந்த 16 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பி அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் 62 வயது வரை மட்டுமே அவர்களை பணியில் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
மறுநியமனம் செய்யும் திட்டம் வரும் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 வயதில் ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.