ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2025- 2026 சுழற்சிக்கான தொழில்நுட்ப வல்லுநர் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. ஜூன் 16 தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில்,முழு விவரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலிப்பணியிடங்களில்,180 காலிப்பணியிடங்கள் டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பணிக்கும், மீதமுள்ள 6000 காலிப்பணியிடங்கள் டெக்னீசியன் கிரேடு 3 பணிக்குமானது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 3 கட்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு முதலில் கணினி வழியில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் : விண்ணப்பதாரர்கள் இயற்பியல், மின்னணுவியல், கணினி அறிவியல், ஐடி அல்லது இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவற்றில் பிஎஸ்சி பட்டம் அல்லது தொடர்புடைய துறைகளில் பொறியியலில் டிப்ளமோ/பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீஷியன் கிரேடு 3: வேட்பாளர்கள் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி/மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஃபவுண்ட்ரிமேன், மோல்டர், பேட்டர்ன் மேக்கர் அல்லது ஃபோர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர் போன்ற குறிப்பிட்ட தொழில்களில் ஐ.டி.ஐ அல்லது அப்ரண்டிஸ்ஷிப்பை முடித்திருக்க வேண்டும்
தரம் 1 சிக்னல்: 18 முதல் 33 ஆண்டுகள் வரை
தரம் 3: 18 முதல் 30 வயது வரை
ரூ.250: எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (CBT தேர்வில் கலந்து கொண்டவுடன் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்)
ரூ.500: மற்ற அனைத்துப் பிரிவினரும் (CBT தேர்வில் கலந்து கொண்டவுடன் ரூ.400 திரும்பப் பெறப்படும்)
மாத ஊதியம்: டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பணி சம்பள நிலை 5 இன் கீழ் வருகிறது. இதற்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் 92,300 வரையிலும், சம்பள நிலை 2 இல் உள்ள டெக்னீசியன் கிரேடு 3 பணிக்கு ரூ.19,900 முதல் 63,200 வரை என 7வது மத்திய ஊதிய ஆணையத்தின் (CPC) வழிகாட்டுதல்களின்படி கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளும் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியதற்கான அவகாசம் ஜூலை 28ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது.