லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில் நடைமேடையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது தூய்மைப் பணியாளர்கள் தண்ணீரை இரைத்து எழுப்பும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், இந்த மோசமான நிகழ்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார ஏஜென்சியிடம் விளக்கம் கோரி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் நடைமேடையில் தூங்குவதை தவிர்க்கும்படி ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.