நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
25 ஆண்டுகளை இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், ``வரும் நிதியாண்டில், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை வரும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தொடர்புடைய செய்தி: மத்திய பட்ஜெட்: ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்