விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தமளித்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் பேசிய அவர், மகாத்மா காந்தியின் கொள்கைகளை தனது குடும்பமும் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார். அதேபோல், தனது தந்தை ராஜூவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தமளித்ததாக தெரிவித்தார். பிரபாகரன் உயிரிழந்த பின்னர் அவரது உடலை பார்த்த போது தானும், தனது சகோதரி பிரியங்கா காந்தியும் வருத்தமடைந்ததாக கூறினார்.