இந்தியா

தேர்தல் முடிவுக்குப் பின் குஜராத் கோயிலில் ராகுல் வழிபாடு!

தேர்தல் முடிவுக்குப் பின் குஜராத் கோயிலில் ராகுல் வழிபாடு!

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இமாச்சல பிரதேசம் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல் முடிவிற்கு பிறகு 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள ராகுல் காந்திக்கு கெஷோட் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் சோம்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இதன் பிறகு அவர், குஜராத்தில் புதிதாக தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து அவர்களிடம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியின் காரணங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.