பிரதமர் மோடி ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு பிரச்னைகளை பேசாமல் பொம்மைகள் குறித்து பேசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றிய கருத்துகள் தொடர்பாக ராகுல் காந்தி தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், பிரதமர் மோடி ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு தொடர்பாக உரையாற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நேரத்தில் நுழைத்தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பேசவில்லை என தெரிவித்துள்ள ராகுல், இதையெல்லாம் விடுத்து பிரதமர் பொம்மைகள் குறித்து பேசியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்த பிரதமர் மோடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளை புகழ்ந்து பேசியிருந்தார். அதேபோல் ராஜபாளையம், சிப்பிப்பாறை ஆகிய இனத்தைச் சேர்ந்த நாய்களை மக்கள் அதிகம் வளர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.