இந்தியா

ராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு

ராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு

webteam

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் அவரது சொந்த மக்களவை தொகுதியான அமேதியில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி முழுவதும் பல இடங்களில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை, காணாமல் போன ராகுலை கண்டுபிடித்து தருவோருக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் என ஹிந்தியில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களின் சதிச்செயல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதிய ஜனதா, தொகுதிக்கு என்று ராகுல் எதுவுமே செய்யாததே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்துள்ளது.