இந்தியா

ராமர் வேடத்தில் ராகுல்? - சர்ச்சை கிளப்பும் காங். போஸ்டர்

ராமர் வேடத்தில் ராகுல்? - சர்ச்சை கிளப்பும் காங். போஸ்டர்

webteam

மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. அதற்காக பல மாநிலங்களில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பல்வேறு பொதுமேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் ‘ஜன அகன்ஷா’பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனிய காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகியவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்திற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ராகுல் காந்தியை ராமராக சித்தரித்துள்ளார். இந்த போஸ்டர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களுக்கு முன்பு ராகுல் காந்தியை சிவ பக்தராக காங்கிரஸ் கட்சி சித்தரித்து காட்டியிருந்தது. இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. 

இதற்கு முன்பு ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் கலந்துகொண்டார். வாக்கு அரசியலுக்காகவே இந்த மாதிரியான செயல்களில் ராகுல் ஈடுபடுகிறார் என பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.