மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் பெற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால்பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக் காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ‘’ அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கொள்கைகளின் அடிப்படையில் மோதிக்கொள்வோம். இருந்தும் நானும், காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் 100 சதவீதம் நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.