இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி கூறும்போது, ‘’இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத நிலை. இது வெளிப்படையானது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது.
கொரோனா காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்று நான் நாட்டை எச்சரித்தபோது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் சொல்வதைக் கேட்க வேண்டாம். ஆனால், இன்று நிலைமையை நீங்கள் காணுகிறீர்கள். நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் ஆறு ஏழு மாதங்கள் காத்திருங்கள்.” என கூறியுள்ளார்