இந்தியா

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு

Veeramani

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் படத்தை வெளியிட்ட காரணத்திற்காக ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை கடந்த வாரம் அந்நிறுவனம் தற்காலிமாக முடக்கியது. இத்தகைய செயல் தங்கள் நிறுவன விதிகளுக்கு முரணானது என அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. எனினும் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளன என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

உள்நாட்டு அரசியலில் ட்விட்டர் நிறுவனம் தலையிடுவதாக சாடிய அவர், இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றும் ட்விட்டரின் ஆபத்தான விளையாட்டு எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு பின் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மீதான முடக்கத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.