குஜராத்தில் டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆடிய நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் வழக்கமான பொதுக்கூட்டம் போல் இல்லாமல் மக்களுடன் கலந்துரையாடுதல், குறைகளை நேரடியாக கேட்டறிதல் போன்ற வித்யாசமான நிகழ்ச்சிகளிலும் ராகுல் பங்கேற்றார். இந்நிலையில் சோட்டா உதய்பூருக்கு சென்ற அவர், டிம்லி எனப்படும் பாரம்பரிய நடனத்தை நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.