இந்தியா

“விவசாயிகளைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறதா?” - ராகுல் காந்தி கேள்வி

Sinekadhara

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விவசாயிகளைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’டெல்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. அவர்கள்தான் நமக்கு வாழ்வாதாரம் தருகிறார்கள். ஆனால் டெல்லியில் தடுப்பு நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்பட்டுள்ளது? நாம் ஏன் அவர்களை பயமுறுத்துகிறோம்; அடித்து கொலை செய்கிறோம்? அரசு ஏன் அவர்களுடன் பேசவில்லை; இந்த சிக்கலை தீர்க்கவில்லை? இந்த பிரச்னை நமது நாட்டுக்கு நல்லதல்ல.

விவசாயிகளை கண்டு மத்திய அரசு பயப்படுகிறதா? ஒரே தொலைபேசி அழைப்பில் அரசு பேசவரும் என்றார் பிரதமர். ஆனால் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன்வராதது ஏன்? விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. எனவே விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’’ என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.