இந்தியா

விவசாயிகள் பிரச்னையில் மௌனமாகிவிடுகிறோம்: ராகுல்

webteam

விவசாயிகள் பிரச்னை என்றால் நாம் மௌனமாகி விடுகிறோம் என்றும் அதனால்தான் நிலங்கள் வர்த்தகமாக்கப்படுகின்றன எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அமெரிக்கா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பிய ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் நவ்சார்ஜன் மூன்று நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார்.  குஜராத்தில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ராகுல் பார்வையிட்டார். அப்போது இந்த நாட்டை விவசாயிகள்தான் மேம்படுத்தினர். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மெளனமாகிவிடுகிறோம். ஆகவே அவர்களின் நிலங்கள் வர்த்தகமாக்கப்படுகின்றன. மக்களுக்கான நிதியில் அதிக தொகையை கல்விக்காகவும் உடல்நடத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் செலவழிக்கவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பேசினார். 
இப்பயணத்தின் இடையே குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற துவாரகதிஷ் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். ராகுல் வருகையையொட்டி, துவாரகா கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.