இந்தியா

அடுத்த மாதம் காங். தலைவராகிறார் ராகுல்

அடுத்த மாதம் காங். தலைவராகிறார் ராகுல்

webteam

காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடைமுறைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என ராகுல்காந்தி சமீபத்தில் கூறியிருந்தார்.