வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனது பிரமாணப் பத்திரத்தில் அவர், தனக்கு சுமார் 12 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிரியங்கா காந்தியும் அவரது சகோதரர் ராகுல் காந்தியும், வயநாட்டில் பேருந்து பயணம் மேற்கொண்டனர். அப்போது ராகுல் காந்தி, தன்னை தவிர வயநாட்டிற்கு வேறொரு எம்.பியை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், பிரியங்கா காந்தியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என கூறினார். பிரியங்கா காந்திக்கு பல நற்பண்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது ஒருவர் ராகுல் காந்தியிடம், அவரை விட சிறந்த வயநாட்டின் எம். பியாக பிரியங்கா வருவாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி, தான் அப்படி கருதவில்லை என சிரித்தபடி பதிலளித்தார். இந்த வீடியோவை ராகுல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.