இந்தியா

கோயிலை சுற்றி வந்து வேண்டிக்கொண்ட ராகுல்காந்தி

கோயிலை சுற்றி வந்து வேண்டிக்கொண்ட ராகுல்காந்தி

webteam

குஜராத் சாமுண்டி மாதா கோயிலை சுற்றி வந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வழிபாடு செய்தார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத். அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸின் நிலையை வலுப்படுத்த ராகுல் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

குஜராத் ஜோதிலா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டி மாதா கோயிலுக்கு சென்ற ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலைச் சுற்றி வந்து வழிபாடு செய்த ராகுல், அதன் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.