பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூறியிருந்த நிலையில், நமது அறிவாளிகள் அதற்கு மாறாக அரசுக்கு வருவாயை உயர்த்தியுள்ளனர் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலக அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தாம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆனால் அதற்கு மாறாக எரிபொருள் விலையை உயர்த்தப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வீடியோவையும் ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா மூன்று ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.