rahul gandhi web
இந்தியா

’காகிதத்தில் வைத்து குழந்தைகளுக்கு மதிய உணவு..’ இதயம் உடைந்ததாக ராகுல்காந்தி பதிவு!

மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு காகிதத்தில் வைத்து வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

PT WEB

மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்துவழங்கப்பட்ட வீடியோவை பார்த்ததும், தனது இதயம் உடைந்து போனதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தின் ஷியோபூர் பகுதியில், மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, காகிதத்தில் வைத்து வழங்கப்பட்ட வீடியோவை, ஊடகவியலாளர் அனுராக்த்வாரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தாம் உடனே மத்திய பிரதேசம் விரைவதாகக் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில், சிறிதளவு மாண்புகூட இல்லை என்று ஆதங்கப்பட்டுள்ள ராகுல், 20ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசின் வளர்ச்சி என்பது, வெறும் மாயை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதாகவும் ராகுல் காந்திகூறியுள்ளார்.