ட்விட்டர் வலைதளத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை பின் தொடர்வோர் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதத்தில் அதிகரித்துள்ளது.
தேசிய அரசியலில் உள்ள தலைவர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். இதில், பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் போன்றோர் ட்விட்டரில் முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதேபோல், ராகுல்காந்தியும் ட்விட்டரில் தொடர்ச்சியாக இயங்கக் கூடியவர். கடந்த ஜூலை மாதம் சுமார் 24 லட்சம் பேர் ராகுலை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை செப்டம்பர் 17-ம் தேதியுடன் 34 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் கூடுதலாக ராகுலை பின் தொடர்கிறார்கள்.