தகவல் பரிமாற்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னைவிட வல்லவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கிய பெருமை பிரதமர் மோடியைத்தான் சாரும் என்றும் சாடினார். மேலும் பேசிய அவர், தன்னுடன் பணிபுரிவோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன்? தனது சொந்தக் கட்சியான பாரதிய ஜனதாவினருடன் கூட அவர் எந்த தகவல்களையும் பரிமாறிக் கொள்வதில்லை என்றும், தகவல் பரிமாற்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னைவிட வல்லவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.
வாரிசு அரசியல் பல்வேறு நாடுகளிலும் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டு பதிலளித்தார். வன்முறைக்கு தனது தந்தையையும், பாட்டியையும் பறிகொடுத்த தன்னைத் தவிர அதன் கொடூரம் குறித்த வேறு யாரால் உணரமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.