பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.
பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். பிரான்ஸில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது. அதேபோல், விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும் முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் ராஜ்நாத் சிங். விமானத்திற்கு கயிறு கட்டிய பின்னர் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.