எந்தக் காரணத்தைக் கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் ரஃபேல் போர் விமானத்தை பயன்படுத்த தலைமை கணக்குத் தணிக்கை துறையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கு கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை விட தற்போது ரஃபேல் விமானம் மலிவாக வாங்கப்படுகிறது என்றும் இது தொடர்பான விலை மற்றும் உண்மை நிலவரங்கள் புள்ளி விவரங்களுடன் தலைமை கணக்குத் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.