ரஃபேல் குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இந்தியாவிடம் முதல் ரஃபேல் விமானம் 2019 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பான முழுமையான விவரங்கள், செலவுகள் குறித்த விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் அளிக்கும். சிஏஜி அறிக்கை 2019 - 2020 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவதாக இருந்தது"
மேலும் "கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்கப்பட்டுவிட்டதால், ரஃபேல் தொடர்பான விவரங்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பிக்கப்பட்ட பின்பே தெரிய வரும்" என கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.