இந்தியா

லாலுவின் மனைவி, மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

லாலுவின் மனைவி, மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

webteam

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நில ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இருவருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான இருவரிடமும், பினாமி சொத்துகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக டெல்லியிலிருந்து அதிகாரிகள் பீகார் வந்துள்ளனர்.

லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் சந்தா, ராகினி யாதவ், பாரதி, மருமகன் குமார் ஆகியோரது சொத்துகளை கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறையினர் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.