Tractor accident PT Web
இந்தியா

விளையாட்டு திருவிழா சாகசத்தின் போது விபரீதம்.. டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் சாகசத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

webteam

பஞ்சாப் மாநிலம் சர்ச்சூர் கிராமத்தில் உள்ளூர் விளையாட்டு திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர். இந்நிலையில், சுக்மன்தீப் என்பவர், டிராக்டர் சாகசத்தில் ஈடுபட்டார். செங்குத்தாக டிராக்டரை நிறுத்தி, அதை ஓடவிட்டு ஏற முயன்றார். அப்போது நிலைதடுமாறு கீழே விழுந்த சுக்மன் மீது, டிராக்டர் ஏறியது.

death

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சாகசங்களுக்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.