பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் ரூ.3800 கோடி கடன் வாங்கி நிதி மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் வங்கி நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்தியது என்றும், கூட்டமைப்பு வங்கிகளிடமிருந்து கடனாக நிதி திரட்ட கணக்கு புத்தகங்களில் மோசடியை கையாண்டு உள்ளதாகவும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் குற்றச்சாட்டை அடுத்து பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி கடந்த ஆண்டு 2 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடி புகாரை தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் ரூ.3800 கோடி நிதி மோசடியில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி சிக்கியுள்ளது.
கடனை திரும்ப செலுத்தாததால் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே திவால் வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியும் மோசடி புகார் கொடுத்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மோசடி புகார் குறித்து பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை