இந்தியா

பஞ்சாப் கள்ளச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு !

பஞ்சாப் கள்ளச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு !

jagadeesh

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ், படாலா, டார்ன் தரன் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் சிலா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை இறந்த 5 பேர் குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அறிவிக்காமல் இறுதி தகனம் செய்தனர். இதற்கிடையே, போலி மதுபானம் விற்பனை செய்தது தொடா்பாக முச்சல் கிராமத்தைச் சோ்ந்த பல்விந்தா் கெளா் என்பவரை காவல்துறை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஜூலை 29ம் தேதி முதல் மரணம் ஏற்பட்டது. அதன்பின் 30ம் தேதி அதிகாலை மேலும் 2 பேர் மரணம் அடைந்தனர். அதன்பின் வரிசையாக அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்தமாக இதுவரை 62 பேர் பலியாகி உள்ளனர். எல்லோரும் உடலுறுப்புகள் செயலிழந்து பலியாகி உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.