இந்தியா

வேகமெடுக்கும் கொரோனா 2-ம் அலை: பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர பொதுமுடக்கம்!

Sinekadhara

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் இரவு நேர பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.

பஞ்சாபில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வரும் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 30ஆம் தேதி வரை அரசியல் பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள தொற்றுகளில் 80% வேகமாக பரவும் இங்கிலாந்து வகை உருமாற்ற வைரஸால் ஏற்பட்டவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்தியாவில் ஓருநாள் கொரோனா தொற்று 1,15,736 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 6ஆம் தேதி 18 ஆயிரத்து 327ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு, ஒரே மாதத்தில் 1 லட்சத்து 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 55,469 பேர் ஒரு நாளில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.