பஞ்சாப்பில் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களின் நிலை குறித்து நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 3-ம் தேதிக்கு பிறகு மேலும் 2 இருவாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கின் போது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்த சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடைகளும் திறந்து இருக்கும்.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் மே 3-ம் தேதிக்கு பிறகு மேலும் 2 இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். கடந்த முறையும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தபோது, முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது பஞ்சாப் மாநிலம்.