இந்தியா

நெடுஞ்சாலையில் நின்றவர்கள் மீது ஏறிய சொகுசு பேருந்து  - இருவர் உயிரிழப்பு   

நெடுஞ்சாலையில் நின்றவர்கள் மீது ஏறிய சொகுசு பேருந்து  - இருவர் உயிரிழப்பு   

webteam

தேசிய நெடுங்சாலையில் நின்று கொண்டிருந்த டாக்டர் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவர் மீது சொகுசு பேருந்து ஒன்று மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

புனே பகுதியை சேர்ந்த மருத்துவர் கேடன் ஸ்ரீபட். இவரும் இவருடன் இரு மருத்துவர்களும் ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளனர். இவர்கள் ஒரு வாடகை காரை எடுத்து சென்றுள்ளனர். இந்தக் கருத்தரங்கு முடிந்து மீண்டும் இவர்கள் புனேவிற்கு திரும்பியுள்ளனர். அப்போது புனே-மும்பை தேசிய நெடுங்சாலையில் பயணித்த போது காரின் டயர் பஞ்சர் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து காரின் டயரை டிரைவர் சரி செய்து கொண்டிருந்தார். 

அந்தச் சமயத்தில் நெடுங்சாலையில் வந்த சொகுசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரைவர் மற்றும் டாக்டர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டாக்டர் ஸ்ரீபட் மற்றும் டிரைவர் உயிரிழந்தனர். மேலும் காரினுள் அமர்ந்திருந்த மற்ற இரண்டு டாக்டர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை, “இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு பேருந்தின் டிரைவர் தப்பி ஓடி விட்டார். எனினும் நாங்கள் அவரை தேடி வருகிறோம். மேலும் அந்த சொகுசு பேருந்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.