புனே அருகே அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில், நேற்று காலை முதல் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் கடும அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், புனேவில் கடும் மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து விழுந் ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனே அருகிலுள்ள கோந்தவா என்ற பகுதியில், தலாப் மசூதி அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் அருகே, குடிசை பகுதி இருக்கிறது. அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து, குடிசை பகுதியில் விழுந்தது. இதில், 4 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடு களுக்கு இடையே சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.