இந்தியா

புல்வாமா தாக்குதல்: வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பு

webteam

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. ஜெயிஷ் இ முகம்மது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. தடயவியல் நிபுணர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருளிலுள்ள ரசாயனம் பற்றி ஆய்வு செய்வதாக தெரியவந்துள்ளது. 

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஒரு குழுவும் தேசிய பாதுகாப்பு படையின் மற்றொரு குழுவும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் விசாரனை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைத்த ஆவணங்கள் மத்திய தடையவியல் துறையின் ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.