செய்தியாளர்: அப்துல் அலீம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மாசிமகப் பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் ஒரு அலங்கார வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள் வீதியுலா வந்தனர்.
இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு தியாகராஜர் உன்மத்த நடனம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தியாகராஜரின் உன்மத்த நடனத்தை கண்டு ரசித்தனர்.
இதைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி தெருவடைச்சான் சப்பரமும், 12ம் தேதி தேர் திருவிழாவும் அன்று இரவு ஜடாயு - இராவண யுத்தமும், அதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 14ம் தேதி தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற உள்ளது.