puducherry  x page
இந்தியா

நாளை புத்தாண்டுக் கொண்டாட்டம்.. கடும் கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி காவல் துறை!

புத்தாண்டு கொண்டாட பலரும் புதுச்சேரிக்கு படையெடுத்து வரும் நிலையில், அம்மாநில காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

PT WEB

புத்தாண்டு கொண்டாட பலரும் புதுச்சேரிக்கு படையெடுத்து வரும் நிலையில், அம்மாநில காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட பலரும் புதுச்சேரிக்கு படையெடுத்து வரும் நிலையில், அம்மாநில காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் நடைபெறும் என்பதால், அங்கு 70க்கும் மேற்பட்ட புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஏதுவாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

puducherry

வாகன நிறுத்துமிடங்களில் இருந்து கடற்கரைப் பகுதிக்குச் செல்வதற்கு 30 மின்சாரப் பேருந்துகள் காவல் பாதுகாப்புடன் இயக்கப்படும். புதுச்சேரி மாநில எல்லைகளில் வழிகாட்டுவதற்காக புதிய கியூஆர் குறியீட்டு வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்பயணிகள் எந்தப் பகுதிக்குச் செல்வது என்பதை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக அறிந்துகொள்ளலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாடுவதற்கு புதுச்சேரி வரும் குழந்தைகளுக்கு கையில் பெற்றோரின் மொபைல் எண் கொண்ட பேண்ட் ஒட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம்பர் பிளேட் இல்லாமல் வரும் அனைத்து வாகனங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் ஒயிட் டவுன் பிரெஞ்சு குடியிருப்பு பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவாலயங்களுக்குச் செல்பவர்கள்,அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.