இந்தியா

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக வேட்பாளர்கள் வெற்றி நிலவரம்

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக வேட்பாளர்கள் வெற்றி நிலவரம்

webteam

நெடுங்காடு தனி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரபிரியங்கா 10,774 வாக்குகள் பெற்று, 8,560 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவை விட 2,214 வாக்கு வித்தியாசத்தில் சந்திரபிரியங்கா வெற்றி பெற்றார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிச்சர்ட் ஜான்குமார் 11,757 வாக்குகள் பெற்று 11,261 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் கார்த்திகேயனை விட 496 வாக்குகள் வித்தியாசத்தில் ரிச்சர்ட் ஜான்குமார் வெற்றி பெற்றார்.

ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஷ்மிகாந்தன் 15,624 வாக்குகள் பெற்று 13,704 வாக்குகள் பெற்ற முன்னாள் அமைச்சர் கந்தசாமியை 2,240 வித்தியாசத்தில் லெஷ்மிகாந்தன் வெற்றி பெற்றார்.

காமராஜ்நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் 16,687 வாக்குகள் வெற்றி பெற்றார். 9,458 வாக்குகள் பெற்ற முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7,229 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கதிர்காமம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வநாதனை விட 12,746 வாக்கு வித்தியாசத்தில் ரமேஷ் வெற்றி பெற்றார்.

உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி 13,433 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான அன்பழகனை 4,780 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைய செய்தார். அன்பழகன் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் 2750 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றார்.