விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 2019 - 2020 க்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும் எனவும் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைவரையும் வெளியேற்றும்படி சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரம் கழித்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் வரவேண்டும் என சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.