இந்தியா

புதுச்சேரி: திருவள்ளுவர் தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை - 7 பேர்மீது கலால் துறை வழக்கு

webteam
திருவள்ளுவர் தினத்தில் புதுச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர் மீது கலால் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 44 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்து ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானம், சாராய மற்றும் கள்ளு கடைகளை ஒருநாள் மூட கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா, கள்ளதனமாக மதுபானங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க கலால் துறை மூன்று பறக்கும் படைகள் அமைத்து புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது புறநகர பகுதிகளான சந்தைகுப்பம், லிங்கரெட்டிபாளையம், காட்டேரிகுப்பம், சேதராபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் நகர பகுதிகள் சில இடங்களிலும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனையில் ஈடுப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கலால்துறையினர் அவர்களுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த தொகையை புதுச்சேரி கருவூலத்தில் செலுத்தினர்.