இந்தியா

களத்தில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்த முதலமைச்சர்

களத்தில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்த முதலமைச்சர்

webteam

புதுச்சேரியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கழிவுநீர்க் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளைத் தாங்களே இறங்கிச் சுத்தம் செய்தனர்.

புதுச்சேரியில் கடந்த 4 தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த குழுக்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மழை நீர் தேங்காதவாறு பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் பல்வேறு கழிவுநீர் வாய்க்கால்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான பூமியான்பேட், பாவாணன் நகர், எழில் நகர், பிள்ளைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இங்குள்ள வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ரேசனில் அரிசி மற்றும் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். அப்போது மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டடார். மேலும் பிள்ளைத்தோட்டம் பகுதியில் இருந்த கால்வாயை அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சரே சுத்தம் செய்தார்.