இந்தியா

புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு... முதல்வர் நாராயணசாமி இன்று அவசர ஆலோசனை

Rasus

புதுச்சேரியில், பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். அதில் நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே நாளை வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.