செய்தியாளர்: ஸ்ரீதர் கதிரேசன்
புதுச்சேரி அடுத்த பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி செந்தில் கண்ணன்.. சிலம்ப குருகுலம் நடத்தி வரும் இவர், பல்வேறு விதமான, சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
இவரிடம் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்களும் சிலம்பம், யோகா உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி இவரிடம் கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு காலைகள் பயிற்சி பெற்றுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.