Road accident pt desk
இந்தியா

புதுச்சேரி: கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - தலைமை காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், தலைமைக் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஸ்ரீதர்

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் (57). இவர் இன்று அதிகாலை தனது மனைவி ஏஞ்சல் உறவினரின் பிள்ளைகளான சுசிலா பிரசன்னா, சைன் பிரிசி ஆகிய 4 பேரும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் பயணம் செய்துள்ளனர், அப்போது மதகடிப்பட்டு மேம்பாலத்தில் வரும்போது எதிரே வந்த கார் மீது நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் ஓட்டுநர் சந்திரன் ஆகியோரின் உடல்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மற்றொரு காரில் பயணம் செய்து உயிரிழந்த கதிரவன் மற்றும் முனியன் ஆகியோரது உடல்கள் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.