புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு இன்று காலை விமான சேவை தொடங்கியது.
புதுச்சேரி - ஹைதராபாத் விமான சேவையை புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். மூன்றாவது முறையாக புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமான சேவை தொடங்கியுள்ளது. விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு முதலமைச்சர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட விமான சேவை அடுத்த ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதேபோல், 2015-ல் தொடங்கப்பட்ட விமான சேவையும் அந்த ஆண்டே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் மூன்றாவது முறையாக ஹைதராபாத்திற்கு விமான சேவை இன்று தொடங்கியது.
புதுச்சேரியிலிருந்து தினமும் காலை 11:40-க்கு புறப்படும் விமானம் மதியம் 1:10-க்கு ஹைதராபாத் சென்றடையும் என்றும், அங்கிருந்து காலை 10:00 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு 11.40-க்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.