இன்றைய மாலை தலைப்புச் செய்தியானது பிகார் கருத்துக்கணிப்புகள் முதல் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் வரை விவரிக்கிறது.
பிஹாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என பெரும்பான்மையான முடிவுகளில் தகவல்...
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு... டெல்லி கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்... சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை...
டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது... சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என பிரதமர் மோடி உறுதி...
எஸ்ஐஆருக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஆணை... உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவு...
மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்... டார்ச் லைட், விசில் உள்ளிட்ட 3 சின்னங்களில் ஒன்றை தருமாறு ஆணையத்தை நாடியது மக்கள் நீதி மய்யம்,...
இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவை விரும்பத் தொடங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித இறக்குமதி வரி குறைக்கப்படும் என்பதை ட்ரம்ப் சூசகமாக கூறியிருப்பதாக கருதப்படுகிறது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அது வெறும் புரளி என தெரியவந்தது.
நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசு, ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் ஸ்ஸாலெய்யின் Flesh நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு வெல்லும் முதல் ஹங்கேரிய - பிரிட்டிஷ் எழுத்தாளர் இவரே.
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் யஷ்தீப், அடானு, ராகுல் ஆகியோர் கொண்ட இந்திய ரீகர்வ் ஆண்கள் அணி, கஜகஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நடிகர் தர்மேந்திரா காலமாகிவிட்டார் என செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதை அவரது மனைவி ஹேமமாலினி மறுத்துள்ளார். சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிவரும் ஒருவரை இறந்துவிட்டார் என எப்படி கூறலாம் என வினவியுள்ள ஹேமமாலினி, இது மன்னிக்க முடியாத தவறு என கூறியுள்ளார்.