இந்தியா

தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்!

JustinDurai

மாநிலங்களுக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகள் முழவதையும் மத்திய அரசு இலவசமாக வழங்கவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசி தயாரிப்பாளர்கள் 50 சதவிகித தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், வெளிசந்தையில் விற்பதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது போல் தடுப்பூசிகளை வாங்குவது மாநில நிதியாதரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் தடுப்பூசிகளை இலவசமாக தரவேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து தடுப்பூசிகளை முழுவதும் இலவசமாக வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாளுக்கு நாள் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.