Congress protest pt desk
இந்தியா

கர்நாடகா: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் கருப்பு மை பூசி போராட்டம் - காங்கிரஸார் கைது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில், கருப்பு மை பூசி போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.

webteam

கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய மானியம், வரி பங்கு, வறட்சி நிவாரண நிதி உள்ளிட்டவைகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில காங்கிரஸார் குற்றஞ்சாட்டி நேற்று முன்தினம் புதுடெல்லியில் போராட்டம் நடத்தினர்.

Congress protest

இதற்கிடையில் அம்மாநிலத்திலுள்ள மாணவர் காங்கிரஸார் பெங்களூரு அலி அஸ்கார் சாலையில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் கருப்பு மை பூசி அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இதையடுத்து கருப்பு மை அழிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.