இந்தியா

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்தத் திட்டம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்தத் திட்டம்

webteam

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகள் லோக்சபா மற்றும் ‌ராஜ்ய சபா தொலைக்காட்சிகளில்‌ ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு, அவை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்து தனியாக வெளியிட ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஆளும் அரசுக்கு எதிரான கருத்து பொதுமக்களிடம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது.