காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் 23 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.